புத்ராஜெயா, 30 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதி வரை உயர்கல்விக்கூட மாணவர்கள் 100 ரிங்கிட் மதிப்புள்ள இரண்டாம் கட்ட புத்தக பற்றுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
அதற்கான விண்ணப்பம் இன்று காலை 10 மணி தொடங்கி திறக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தது.
அனைத்து உயர்கல்வி கூட மாணவர்களும் தமது புத்தக பற்றுச்சீட்டை, MySISWAPLACE என்ற அகப்பக்கத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று உயர்க்கல்வி அமைச்சு இன்று, வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இவ்வாண்டு மார்ச் 31-ஆம் தேதி வரையில் உயர்கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இலக்கவியல் முறையில் புத்தக பற்றுச்சீட்டுகள் வழங்கி வரும் நிலையில், இந்த இரண்டாம் கட்ட முயற்சியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன் பெறுவர்.
இதனிடையே, புத்தக பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் தகுதி முறையை MySISWAPLACE அகப்பக்கத்தில் சரிபார்த்த பிறகு, அதற்கான Kod வழங்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)