பொது

அறிவை அதிகரிக்க உதவும் விதமாக மாணவர்கள் AI-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்

01/11/2024 05:35 PM

கோலாலம்பூர், 01 நவம்பர் (பெர்னாமா) -- படிப்பது மற்றும் திறமையாக சிந்திப்பது போன்று அறிவை வளர்த்துக் கொள்வது போன்ற அடிப்படை அம்சங்களை மாணவர்கள் கைவிடவில்லை என்றால் கற்றலில் செயற்கை நுண்ணறிவு AI-ஐ சிறப்பாக பயன்படுத்தலாம்.

மாணவர்கள் முழுமையாக AI-ஐ சார்ந்திருக்க ஊக்குவிக்கப்படவில்லை.

மாறாக, அடிப்படையாக கற்றுக் கொண்ட அறிவை அதிகரிக்க உதவும் விதமாக AI-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''ஏ.ஐ தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்திருந்தால் நாம் இனி படிக்க மாட்டோம். அனைத்து பதில்களும் கூகளில் உள்ளன. இருப்பினும் கூகளில் உள்ள பதில்கள் சுருக்கமானதுதான். நாம் படிக்க வேண்டும். நாம் புத்தகங்களைப் படிக்கும் போது முழு சிந்தனையில் இருந்து அணுக வேண்டும். நாங்கள் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது ஆபத்து,'' என்றார் அவர்.

AI வழங்கும் தகவல்கள் அல்லது உள்ளடக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதோடு, அந்த தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்படும் தகவல்களும் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)