பொது

ஆசியான் மாநாட்டில் தென்கிழக்காசிய நாடுகளின் பல்கலைக்கழகங்கள் உடனான சந்திப்பை அரசாங்கம் பரிசீலிக்கிறது

01/11/2024 06:29 PM

கோலாலம்பூர், 01 நவம்பர் (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசியான் மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பல்கலைக்கழகங்கள் அல்லது தற்காப்பு பயிற்சி கழக நிறுவனங்களுக்கு இடையிலான சந்திப்புகளை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

2025ஆம் நடைபெறும் ஆசிய தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம் எ.டி.எம்.எம்-க்கு தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது கலேட் நோர்டின் தலைமையேற்கும் நிலையில், அச்சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்படலாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கின்றார்.

''தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பு கூட்டத்தில் அவர்களை உட்படுத்திய திட்டம் வெளிப்படையாக இருக்கும். அதோடு, ஒன்று அல்லது இரண்டு தற்காப்பு அமைச்சர்களை இந்தப் பல்கலைக்கழகத்திற்கு வரவழைப்போம். இது நல்ல பரிந்துரை'' என்றார் அவர்.

ஆசியான் மாநாட்டில் யு.பி.என்.எம் மாணவர்களும் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் டாக்டர் ஜெசிகா ஓங் எழுப்பிய கேள்விக்கு அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.

ஆசியான் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், GCC உச்சநிலை மாநாடு உட்பட அடுத்த ஆண்டு ஏற்பாடு செய்யவிருக்கும் பல முக்கிய மாநாடுகளில் கலந்து கொள்ளும் மலேசியா மீது உயந்த எதிர்ப்பார்ப்பு வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)