ரியாத், 07 நவம்பர் (பெர்னாமா) -- ரியாத் WTA மகளிர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு, சீனாவின் ஒலிம்பிக் வீராங்கனை ஸேங் கின்வென் முன்னேறினார்.
அவர், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை நேரடி செட்களில் தோற்கடித்தார்.
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வரும் WTA மகளிர் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் 8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
அதில், தனிநபருக்கான காலிறுதி சுற்றில் ஜாஸ்மின் பவுலினியைச் சந்தித்த ஜெங் கின்வென் 6-1, 6-1 என்று மிக எளிதில் வெற்றி அடைந்திருக்கின்றார்.
22 வயதான கின்வென், இந்த WTA வரலாற்றில் மிக இளம் வயதில் அரையிறுதிக்கு முன்னேறிய வீராங்கனையாக கருதப்படுகின்றார்.
உலக தரவரிசையில் 7-வது இடத்தில் கின்வென், விம்பிள்டனுக்குப் பிறகு விளையாடிய 34 போட்டிகளில் தனது 30-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்
பாரிஸ் ஒலிம்பிக் வெற்றியாளரான அவர், ஊதாநிற round-robin குழுவில் முன்னேறிய இரண்டாம் ஆட்டக்காரர் ஆவார்.
முன்னதாக உலகின் முதன் நிலை டென்னிஸ் வீராங்கனையான அரினா சபலெங்கா தமது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார்.
இதனிடையே, ரியாத் WTA மகளிர் டென்னிஸ் போட்டியின் குழு பிரிவு இறுதி ஆட்டத்தில் அரினா சபலெங்காவைக் கசக்ஸ்தானின் எலெனா ரைபகினா தோற்கடித்தார்.
கடந்த திங்கட்கிழமை, ஜாஸ்மின் பவுலினியை 6-3, 7-5 என்ற நிலையில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருந்த பெலாருசின் சபலென்கா, தமது இறுதிக் குழு ஆட்டத்தில் 6-4, 3-6 மற்றும் 6-1 என்ற செட்களில் ரைபகினாவிடம் தோல்வியடைந்தார்.
உலகின் முதன் நிலை வீராங்கனையான சபலென்காவை 2024-இல் எதிர்த்து பல வெற்றிகளைப் பெற்ற ஆட்டக்காரர்களாக ரைபகினாவும் இகா ஸ்வியாடெக்கும் உள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)