பாங்கி, 07 நவம்பர் (பெர்னாமா) -- கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 2026 ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் எ.எச்.எம்.எமில் சுகாதாரம் சார்ந்த நான்கு முக்கிய விவகாரங்களில் ஆசியானுக்குத் தலைமையேற்கும் மலேசியா கவனம் செலுத்தும்.
மனநலம் உட்பட மருத்துகள், தொற்றா நோய்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவை அந்த நான்கு முக்கிய விவகாரங்களாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகளின் விலை அம்சத்தில் அதன் பங்கை விரிவுபடுத்துவதுடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது விநியோக பாதுகாப்பை உறுதி செய்ய ஆசியான் ஆற்றலைத் திரட்ட வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் கூறினார்.
இந்தச் சுகாதார பிரச்சனைகள் பெருந்தொற்று காலக்கட்டத்திற்கு இடையில் இருப்பதால் அவை உலக அளவிலான சவால்கள் அடிப்படையில் கையாளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)