உலகம்

லாகூரில் மோசமான காற்றுத் தூமைக்கேடு; பஞ்சாப்பில் சில பள்ளிகளை மூட உத்தரவு

08/11/2024 04:32 PM

லாகூர், 08 நவம்பர் (பெர்னாமா) -- பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் காற்றுத் தூய்மைக்கேடு மோசமடைந்து வருகிறது.

இதனால், நேற்றுத் தொடங்கி பஞ்சாப் மாநிலம் முழுவதும் உள்ள சில பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பஞ்சாப்பின் தலைநகரான லாகூரில் காற்றின் தரம் மோசமடைந்திருக்கும் நிலையில், உலகின் மிகவும் மாசடைந்த தலைநகரமாக லாகூர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

7ஆம் தேதி தொடங்கி நவம்பர் 17ஆம் தேதி வரை பல பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களை மூடுவதற்கும் இயங்கலை வழி கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பஞ்சாப் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

நேற்று லாகூரின் காற்றுத் தரக் குறியீடு 589ஆக பதிவாகியது.

சில கட்டிட நிர்மாணிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து வேலை செய்யவும் உத்தரவிடப்பட்டது.

மாசுபாட்டினால் இப்பகுதியில் உள்ள மக்களின் ஆயுட்காலம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக குறையலாம் என்று கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் வழி கண்டறியப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)