உலகம்

நச்சு நுரையையும் பொருட்படுத்தாது யமுனையில் நீராடிய மக்கள்

08/11/2024 04:39 PM

புதுடெல்லி, 08 நவம்பர் (பெர்னாமா) --  இந்தியா, புது டெல்லியைக் கடந்து செல்லும் யமுனை நதி நச்சு நுரையால் மாசுபட்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் சாத் எனும் பூஜையை முன்னிட்டு அந்நதியில் நீராடினர்.

தொழில்துறை கழிவுகள் மற்றும் சகதியில் உருவான நச்சு நுரையால் யமுனை நதி கடுமையான தூய்மைகேட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

யமுனை நதி தூய்மைகேட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதால், அதில் நீராட வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இருப்பினும், அதனை பொருப்படுத்தாத பலர் சாத் பூஜையை மேற்கொண்டனர்.

சாத் பூஜையின்போது இந்துக்கள் புனித நதிகளில் நீராடுவது வழக்கம்.

சூரிய உதயத்தின் போது நதியில் நீராடி கதிரவனுக்கு நன்றி கூறும் வகையில் இப்பூஜை அமையும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)