மனிலா, 08 நவம்பர் (பெர்னாமா) -- பிலிப்பைன்ஸ்சில் மூன்று மாகாணங்களை மார்ஸ் சூறாவளி தாக்கியது.
இதில் 7,233 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் இலோகோஸ், ககாயன் பள்ளத்தாக்கு மற்றும் டான் கார்டில்லெரா மாகாணங்களின் 239 பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
தற்போது 3958 குடும்பங்களைச் சேர்ந்த 11,476 பேர் 186 தற்காலிக நிவாரண மையங்களிலும் 960 குடும்பங்களைச் சேர்ந்த 2913 பேர் தற்காலிக நிவாரண மையங்களுக்கு வெளியே உதவிகளைப் பெற்று வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)