உலகம்

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் பலி

09/11/2024 07:55 PM

குவெட்டா, 09 நவம்பர் (பெர்னாமா) -- தென்மேற்கு பாகிஸ்தான், குவெட்டாவில் உள்ள இரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இத்தாக்குதலில் இதுவரை 24 பேர் உயிரிழந்திருப்பதை பலோசிஸ்தான் போலீஸ் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்று கூறிய அவர் துல்லியமான தகவல்களை பெற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருதாக தெரிவித்தார்.

இதுவரை இச்சம்பவத்திற்கு எந்தவொரு தரப்பும் பொருப்பேற்கவில்லை.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)