மைன்ஸ், 10 நவம்பர் (பெர்னாமா) -- பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டி.
நேற்று மைன்ஸ்க்கும் போருசியா டார்ட்மண்டுக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற கோல்கள் எண்ணிக்கையில் போருசியா டார்ட்மண்ட் தோல்வி கண்டது.
ஆட்டம் தொடங்கிய 27வது நிமிடத்தில் சிவப்பு அட்டை வழங்கப்பட்டு போருசியா டார்ட்மண்ட் கேப்டன் எம்ரே கேன் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டதால் அந்த அணி அதன் பலத்தை இழந்தது.
இந்நிலையில், 36வது நிமிடத்தில் தென் கொரியாவின் இறக்குமதி ஆட்டக்காரர் லீ ஜே-சங் முதல் கோலை அடித்து மைன்ஸை முன்னணி வகிக்க செய்தார்.
கோல் போடும் முயற்ச்சிகளை டார்ட்மண்ட் மேற்கொண்டு வந்த வேளையில் தனக்கு கிடைத்த பினால்டி வாய்ப்பை கோலாக்கி அக்கிளப் ஆட்டத்தை சமப்படுத்தியது.
இருப்பினும் முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்த மைன்ஸ் மீண்டும் முன்னணி வகிக்க தொடங்கியது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் தனது மூன்றாவது கோலை அடித்து மைன்ஸ் இவ்வாட்டத்தின் வெற்றியை உறுதி செய்து கொண்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)