தோக்யோ, 11 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக, ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் இன்று தங்களின் பதவியிலிருந்து விலகினர்.
இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களின் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்தனர்.
லிபரல் ஜனநாயகக் கட்சி எல்டிபி மற்றும் கோமித்தோ கூட்டணிக்குப் பிரதிநிதிகள் மன்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை கிடைக்காததால் இஷிபா மற்றும் முதன்மை எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவர் யோஷிஹிகோ நோடா இடையே இன்று நடத்தப்படும் வாக்கெடுப்பு, தீர்மானிக்கும் சுற்றுடன் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது நிகழ்ந்தால் ஜப்பானில் கடந்த 30 ஆண்டுகளில் முதன் முறையாக நடைபெறும் தீர்மானிக்கும் சுற்று முறையிலான பிரதமர் தேர்வு இதுவாக இருக்கும்.
பிரதமராவதற்கு ஒரு வேட்பாளர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற வேண்டும்.
இதுபோன்ற சூழல்களில் சிறந்த இரு வேட்பாளர்களுக்குக்கிடையே போட்டி நிலவும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)