விளையாட்டு

ஜப்பான் பூப்பந்து போட்டி; நாட்டின் ஆடவர் இரட்டையர்கள் வெற்றி

13/11/2024 05:51 PM

குமாமொதோ,13 நவம்பர் (பெர்னாமா) --  2024-ஆம் ஆண்டு ஜப்பான் குமாமொதோ மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி.

இன்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்று, நாட்டின் ஆடவர் இரட்டையர்களான ஆரோன் சியா-சோ வூய் யிக் இரண்டாம் ஆட்டத்திற்கு முன்னேறினர்.

டென்மார்க்கின் டேனியல் லண்ட்கார்ட்-மேட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியுடன் ஆரோன்-வூய் யிக் விளையாடினர்.

இவ்வாட்டத்தின் முதல் செட்டில் 15-21 என்ற புள்ளிகளில் ஆரோன்-வூய் யிக் தோல்வி கண்டாலும் அடுத்த இரண்டு செட்களை 21-17, 21-9 என்ற புள்ளிகளில் கைப்பற்றினர்.

இவர்களின் ஆட்டம் 52 நிமிடங்கள் வரை நீடித்தது.

இரண்டாம் ஆட்டத்தில், ஆரோன்-வூய் யிக் ஜோடி தைவானின் சியு சியாங் சீ-வாங் சி-லின் ஜோடியுடன் மோதவுள்ளது.

இதனிடையே கலப்பு இரட்டையர் பிரிவில் களமிறங்கிய நாட்டின் வோங் டியென் சி-லிம் சியூ சியென் ஜோடியும், டென்மார்க் விளையாட்டாளர்களை 22-20, 11-21,21-12 என்ற புள்ளிகளில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தேர்வாகியது.

மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடிய நாட்டின் சியூ சென் - விவியன் ஹூ ஜோடி, உபசரனை நாட்டின் கஹோ ஒசாவா-மை தனபே ஜோடியுடன் 17-21, 16-21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டு போட்டியை விட்டு விலகியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)