உலகம்

இலங்கையில் இன்று பொதுத் தேர்தல்

14/11/2024 04:29 PM

கொழும்பு, 14 நவம்பர் (பெர்னாமா) -- புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் விதமாக இன்று இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுர குமார திசநாயக்கே புதிய அரசாங்கத்தை அமைக்க கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்தார்.

வாக்களிப்பு மையங்கள் திறக்கப்படுவதற்கு முன்னரே மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

13,400 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்ட நிலையில், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஒரு கோடியே 70 லட்சம் வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதிப் பெற்றிந்ததாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நாடு முழுவதும் 70,000 போலீசாரும், 11,000 இராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தலின் முடிவு நாளை மாலை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)