கந்தான்டுவனெஸ், 18 நவம்பர் (பெர்னாமா) -- நேற்று வட பிலிப்பைன்சில் வீசிய மென்-யி எனும் சக்தி சாய்ந்த சூறாவளியால் அங்கே வசிப்பவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு மாத்திற்குள் அந்நாட்டில் வீசிய ஆறாவது பெரிய சூறாவளி இதுவாகும்.
பலந்த காற்றினால் கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகள் கடுமையாக சேதமுற்றன.
பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
மென்-யி சூறாவளியினால் மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்தச் சூறாவளியினால் மரணமடைந்தவர்களின் விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
கந்தான்டுவனெஸ் எனும் தீவு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
அத்தீவில் வசிக்கும் சுமார் 80,000 பேரில் பாதி விழுக்காட்டினர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)