துரின், 18 நவம்பர் (பெர்னாமா) -- ஏ.டி.பி டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் வழி உலகின் முதல் நிலை விளையாட்டாளர் என்ற தமது நிலையை அவர் வலுவாக்கியுள்ளார்.
இன்று அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் யானிக் சின்னர் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் விளையாடினார்.
இவ்வாட்டத்தை 6-4, 6-4 என்ற நேரடி செட்களில் 23 வயதான சின்னர் கைப்பற்றினார்.
இப்போட்டியில் இடம் பெற்ற அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, ஏ.டி.பி டென்னிஸ் தொடரின் கிண்ணத்தை வெல்லும் முதல் இத்தாலியராக அவர் சாதனை படைத்துள்ளார்.
இதனிடையே, அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அதாவது 2030-ஆம் ஆண்டு வரை ஏ.டி.பி டென்னிஸ் தொடர் போட்டி, இத்தாலியில் நடைபெறும் என்று இத்தாலிய டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)