நியு யோர்க், 20 நவம்பர் (பெர்னாமா) -- தற்போதையக் காலக்கட்டத்தில் குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறினால் அவர்களின் எதிர்காலம் பெரும் சிக்கலை எதிர்நோக்க நேரிடும் என்று ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதி அமைப்பு, UNICEF எச்சரித்துள்ளது.
உலகில் குழந்தைப் பருவத்தின் எதிர்காலம், 2050க்குப் பிறகு மூன்று முக்கிய நிலையில் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உலக சிறார்கள் தினத்தன்று அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்கள்தொகை மாற்றம், தொழில்நுட்பங்கள், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் போன்றவை குழந்தைகள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களாக உள்ளன.
பருவநிலை மாற்றங்களால் பல அதிர்ச்சிகள் முதல் ஆபத்துகள் வரை எண்ணற்ற நெருக்கடிகளை அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
மேலும், வரும் ஆண்டுகளில் இது இன்னும் தீவிரமடையும் என்று UNICEF நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் கூறியுள்ளார்.
இன்று உலகத் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள் அல்லது எடுக்கத் தவறிய நன்மைகள் அடிப்படையில் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு 2050இல் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வெறும் கற்பனையை விட செயல் திட்டங்கள் தேவை என்றும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும் கேத்தரின் நினைவூட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)