உலகம்

பல கோடி டாலர் மதிப்பிலான மோசடி திட்டம் தொடர்பில் கவுதம் அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

21/11/2024 04:11 PM

நியூயார்க் , 21 நவம்பர் (பெர்னாமா) -- இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவரும் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவருமான கவுதம் அதானி, பல கோடி டாலர் மதிப்பிலான மோசடி திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதானி மற்றும் அவரது மருமகன், சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் 2020 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 25 கோடி அமெரிக்க டாலர்களுக்கு மேல் கையூட்டு வழங்க முற்பட்டதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

கையூட்டு வழங்குவதை மறைத்ததன் மூலம் இத்திட்டத்தில் பல லட்சம் டாலர்கள் முதலீடு செய்த முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து, அதானி 17 கோடியே 50 லட்சம் டாலருக்கும் அதிகமாக முதலீடு பெற்றதாக தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நியூயார்க் நீதிமன்றம் அதானிக்கு எதிராக கைது ஆணையை வெளியிடப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)