பீஹார் , 21 நவம்பர் (பெர்னாமா) -- மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் சிறந்த 16 குழுக்கள் சந்திக்கும் சுற்றின் இறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான ஜெ.டி.தி 3-0 என்ற கோல்களில் கேஎல் ரோவர்ஸ் கிளப்பைத் தோற்கடித்தது.
நேற்று, தனது சொந்த அரங்கில் விளையாடிய ஜெ.டி.தியின் இறக்குமதி ஆட்டக்காரரான ஹெபர்டி பெர்னாண்டஸ் அந்த மூன்று கோல்களையும் அடித்து ஹட்ரிக் சாதனை புரிந்தார்.
சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் ஜெ.டி.தியின் முதல் கோலை ஹெபர்டி பெர்னாண்டஸ் 26வது நிமிடத்தில் அடித்தார்.
அந்த வெற்றியைக் கொண்டாடி முடித்த சில நிமிடங்களில் அவர் தமது அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார்.
எஞ்சிய ஒரு கோல் இரண்டாம் பாதியின் 71வது நிமிடத்தில் போடப்பட்டது.
மற்றொரு நிலவரத்தில் இந்தியா பீஹாரில் நடைபெறும் மகளிருக்கான ஆசிய வெற்றியாளர் கிண்ண ஹாக்கி போட்டியில் குறைந்த பட்சம் மூன்றாவது இடத்தைப் பெறுவதில் கூட மலேசியா தோல்வி கண்டுள்ளது.
நேற்று நடந்த மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் அது ஜப்பானிடம் 1-4 என்ற கோல்களில் தோல்வியடைந்தது.
இதன்வழி 11 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வரும் வாய்ப்பை மலேசியா தவறவிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)