லண்டன், 21 நவம்பர் (பெர்னாமா) -- உலக கின்னஸ் சாதனை தினத்தைக் கொண்டாடும் வகையில் உலகின் மிக உயரமான பெண்ணும் மிகவும் குள்ளமான பெண்ணும் இன்று சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பின்போது, இருவரும் சாதனை படைத்த நிபுணர்களால் கௌரவிக்கப்பட்டதோடு, புதிய சாதனையாளர்களின் புதிய புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
2 மீட்டர் மற்றும் 15.16 செண்டிமீட்டர் உயரமுடைய துருக்கியைச் சேர்ந்த ஆய்வாளரான ருமேசா கெல்கி, 62.8 செண்டிமீட்டர் மட்டுமே உயரம் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த நடிகையான ஜோதி ஆம்கேவைச் சந்தித்தார்.
சவோய் தங்கும் விடுதியில் இவர்கள் சந்தித்து பேசி மகிழ்ந்தது, உயர வித்தியாசம் எதற்கும் தடை இல்லை என்பதை காட்டியுள்ளது.
உலகின் மிக உயரமான பெண்ணை சந்திப்பது இதுவே முதல் முறை என்றும், தங்கள் இருவருக்கும் பல அம்சங்களில் ஒற்றுமை இருப்பதாகவும் ஜோதி ஆம்கே மகிழ்ச்சி தெரிவித்தார்.
2004இல் தொடங்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை தினம், உலகெங்கிலும் உள்ள மக்களைப் புதிய சாதனைகளைப் படைக்க ஊக்குவிக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)