பொது

1,700 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய விகிதம் சிலாங்கூரிலும் அமல்படுத்தப்படும்

21/11/2024 06:27 PM

ஷா ஆலம், 21 நவம்பர் (பெர்னாமா) --   சிலாங்கூரில் குறைந்தபட்ச ஊதிய விகிதம் அடுத்த ஆண்டு மத்திய அளவில் அமல்படுத்தப்படுவதற்கு ஏற்ப ஆயிரத்து 700 ரிங்கிட்டாக மாற்றியமைக்கப்படும்.

இதன்வழி பயனடையவிருக்கும் தரப்பின் ஒத்துழைப்புடன் சில அணுகுமுறைகளின் மூலம் இதன் அமலாக்கம் அமையும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

"நியாயமான ஊதியத்தை வழங்குவதை ஊக்குவிக்க சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் தனியார் துறை உட்பட பல்வேறு தரப்பினருடன் மாநில அரசு செயல்படும். பொருளாதார நிலைமை மற்றும் பணவீக்க விகிதத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, மாநில அரசாங்கத்திடமிருந்து ஒப்பந்தங்களைப் பெறும் நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்திற்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்", என்று அவர் கூறினார்.

இன்று, சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இஜோக் சட்டமன்ற உறுப்பினர் ஜெஃரி மெஜான் எழுப்பியக் கேள்விக்கு அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)