பொது

புறப்பாடம் & மாணவர்களின் குணாதிசயங்களை உருவாக்குவதில் பி.பி.டி-இன் பங்கு அளப்பரியது

22/11/2024 07:58 PM

கோலாலம்பூர், 22 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டின் கல்வி முறையை சீர்த்திருத்தும் கல்வி அமைச்சின் பல முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் பி.பி.டி எனும் மாவட்ட கல்வி அலுவலகங்களில், உலு லங்காட் மாவட்டமும் ஒன்றாகும்.

கல்வியை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், புறப்பாடம் மற்றும் மாணவர்களின் குணாதிசயங்களை உருவாக்குவதிலும் PPD-இன் விரிவான அணுகுமுறையை, கல்வி தலைமை இயக்குநர் அஸ்மாட் அட்னான் பாராட்டினார்.

''இடைநிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளித் தலைமையாசிரியர்களின் ஈடுபாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை நான் தெளிவாகப் பார்க்கிறேன். எனவே, அவர்களின் தரத்தை மேம்படுத்த முடியும் என்பது உறுதி. இதற்குக் காரணம் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் செயல்முறைதான்,'' என்றார் அவர்.

நேற்று, காஜாங்கில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு பாராட்டு மற்றும் விருதளிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகத்தின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விழா நடைபெற்றது.

மாணவர்கள் இலக்கவியல் கல்வியில் சிறந்தவர்களாக இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, ஆசியர்கள் தங்கள் இலக்கவியல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அஸ்மான் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)