குர்ரம், 22 நவம்பர் (பெர்னாமா) -- வடமேற்கு பாகிஸ்தானின், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர்.
அதோடு, 29 பேர் காயமடைந்திருப்பதாக கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைமை செயலாளர் நாடிம் அஸ்லாம் செளத்ரி தெரிவித்தார்.
பழங்குடியினர் வசிக்கும் குர்ரம் மாவட்டத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலியானவர்களில் பெண்களும் குழந்தையும் அடங்குவர்.
மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று நாடிம் அஸ்லாம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் எல்லையில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் நில தகராறு பிரச்சனைகள் தொடர்பில் ஆயுதமேந்திய ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்களுக்கு இடையே பல ஆண்டுகளான பதற்றம் நிலவுகிறது.
இச்சம்பவத்திற்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)