ஷங்காய், 22 நவம்பர் (பெர்னாமா) -- 2024 சீனா மாஸ்டர்ஸ் பொது பூப்பந்து போட்டியின், அரையிறுதி சுற்றுக்கு நாட்டின் தேசிய கலப்பு இரட்டையர்கள் இரு ஜோடியினர் தொடர்ந்து முன்னேறி உள்ளனர்.
இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், சென் டாங் ஜீ - தோ ஈ வெய் ஜோடி, உபசரணை நாட்டினரை வீழ்த்தி அடுத்த சுற்றில் கால் வைத்தனர்.
சீனாவின் குவோ சின் வா - செங் ஃபாங் ஹுய் இணையரிடம், 14-21 என்று முதல் செட்டில் தோல்வி கண்ட டாங் ஜீ - ஈ வெய் ஜோடி இரண்டாம் மூன்றாம் செட்களில், 23-21 மற்றும் 21-16 என்ற நிலையில் வெற்றி கண்டனர்.
இதனிடையே, தைவானின் ஆட்டக்கார்களை வீழ்த்தி, சிறந்த நான்கு ஆட்டக்காரர்கள் சந்திக்கும் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கின்றனர் நாட்டின் மற்றுமொரு கலப்பு இரட்டையர்களான ஹூ பாங் ரான்-செங் சூ யின் ஜோடியினர்.
அவர்கள், 21-10, 21-16 என்று 31 நிமிடங்களில், ஆட்டத்தை நேரடி செட்களில் முடித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)