பார்சிலோனா, 24 நவம்பர் (பெர்னாமா) -- ஸ்பெய்னின் பிரபல சுற்றுலா நகரமான பார்சிலோனாவில்,அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை உயர்வைக் கண்டித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆரப்பாட்டத்தினால், அவர்கள் நகர மையத்தில் உள்ள முக்கிய வழிகளை மறைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
''முதலீட்டிற்காக குறைவான அடுக்குமாடி குடியிருப்புகள்; வாழ்வாதாரத்திற்கு அதிக வீடுகள்'' என்று ஸ்பெயின் மொழியில் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அதோடு, சொந்த வீடுகள் இல்லாதவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் எனவும் முழுக்கமிட்டு அணிவகுத்துச் சென்றனர்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஏற்பாட்டாளர் தரப்பு கூறினாலும், சுமார் 22 ஆயிரம் பேர் மட்டுமே இதில் இருந்ததாக பார்சிலோனா போலீஸ் தெரிவித்தது.
இந்த வீட்டு வாடகை விலை ஏற்றத்திற்கு அரசியல் மாற்றமும் காரணம் என்று சமூக ஆரவலர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் ஸ்பெயினில் சராசரி வாடகை இரட்டிப்பாகியதே இதற்குக் காரணம் என்று அவர்கள் சாடினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)