பொது

T15 பிரிவை வகைப்படுத்தும் பரிந்துரை பரிசீலிக்கப்படுகிறது; விரைவில் அமைச்சரவை தீர்மானிக்கும்

17/12/2024 05:17 PM

கோலாலம்பூர், 17 டிசம்பர் (பெர்னாமா) -- T15 எனப்படும் உயர் வருமானம் பெறும் பிரிவின் வரையறை மற்றும் வகைப்படுத்தும் பரிந்துரை தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதால், கூடிய விரைவில் அமைச்சரவை அதனை தீர்மானிக்கும்.

சில பரிந்துரைகளை அரசாங்கம் விவாதித்து வருவதால், இணக்கம் காணப்பட்ட T15 வரையறை மற்றும் வகைப்பாடு, அரசாங்க உதவி மற்றும் மானியங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று பொருளாதார அமைச்சர், ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.

''பொருளாதார அமைச்சின் T15 வகைப்பாடு முன்னர் பயன்படுத்தப்பட்ட, மொத்த வருமானத்தின் அடிப்படை அணுகுமுறையான B40, M40, T20 ஆகிய பிரிவுகளில் இருந்து, மாறுபடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. உள்ளடக்கிய மற்றும் நியாயமான அளவீடு மற்றும் இலக்கை உறுதி செய்வதற்கான நிகர செலவழிப்பு வருமான முறை பயன்படுத்தப்படும்," என்றார் அவர்.

நிகர செலவழிப்பு வருமானத்தின் அடிப்படையிலான, T15 வரையறை மற்றும் வகைப்பாடு, 'PADU' செயல்முறையில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி நியாயமான வாழ்க்கைச் செலவினக் கூறுகளைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படலாம் என்றும் ரஃபிசி தெளிவுப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)