விளையாட்டு

பண்டஸ்லீகா: புள்ளிப்பட்டியலில் பெயர்ன் முனிக் முதலிடம்

21/12/2024 06:12 PM

முனிக், 21 டிசம்பர் (பெர்னாமா) -  பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டி.

நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெற்றி பெற்று, பெயர்ன் முனிக் புள்ளிப்பட்டியலில் 36 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

சொந்த அரங்கில் விளையாடிய பெயர்ன் முனிக், ஆர்.பி.லெய்ப்சிக்குடன் மோதியது.

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே  பெயர்ன் முனிக்  ஒரு கோலை அடித்த நிலையில், இரண்டாவது நிமிடத்தில் ஆர்.பி.லெய்ப்சிக் தனது ஒரே கோலை அடித்து ஆட்டத்தை சமப்படுத்தியது.

ஆட்டத்தின் முதல் இரண்டு நிமிடங்களில் இரு குழுக்களும் தலா ஒரு கோலை அடித்ததால் ஆட்டம் விருவிருப்பாக மாறியது.

சொந்த அரங்கில் விளையாடுவதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பெயர்ன் முனிக் மீதமுள்ள ஆட்டத்தை ஆக்கிரமிக்க தொடங்கியது.

முதல் பாதி ஆட்டத்தில் மேலும் இரு கோல்களை அடித்து முன்னணி வகித்த பெயர்ன் முனிக், இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு கோல்களைப் புகுத்தி ஆட்டத்தை 5-1 என்று முடித்து வைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)