விளையாட்டு

இவ்வாண்டில் கிடைத்த வெற்றிகள் அடுத்த ஆண்டிலும் தொடரும் - பெர்லி தான் - எம். தினா

25/12/2024 05:24 PM

புக்கிட் ஜாலில், 25 டிசம்பர் (பெர்னாமா) - இவ்வாண்டில் கலந்து கொண்ட போட்டிகள் மூலம் கிடைந்த வெற்றிகள் உற்சாகத்தை வழங்கியிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டிலும் அதே உத்வேகத்தை நிலைநிறுத்திக் கொள்ள மலேசிய மகளிர் இரட்டையர் ஜோடி பெர்லி தான் - எம். தினா எண்ணம் கொண்டுள்ளனர்.

''நாங்கள் ஒரே விவகாரத்தைப் பின்பற்றுவோம் என்று நினைக்கிறேன். நிச்சயமாக நாங்கள் காயமின்றி இருக்க விரும்புகிறோம். எங்களின் ஆட்டம் மற்றும் தொடர்பிலும் தொடர்ந்து முன்னேற விரும்புகிறோம், '' என்று எம். தினா தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவிருக்கும் 2025ஆம் ஆண்டு மலேசிய பொது பூப்பந்து போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்த அவர்கள் உறுதிப் பூண்டுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற உலக பூப்பந்து சம்மேளனம், பி.டபல்யு.எபின் இறுதி உலக தொடர் போட்டியில் குழு அளவில் நடைபெற்ற சுற்றில் பெர்லி தான் - எம். தினா ஜோடி தோல்வி கண்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)