பொது

அதிகமான நிபுணர்களைப் பணிக்கு அமர்த்த சுகாதார அமைச்சு இலக்கு

03/01/2025 05:59 PM

புத்ராஜெயா, 03 ஜனவரி (பெர்னாமா) - இவ்வாண்டில் அதிகமான நிபுணர்களைப் பணிக்கு அமர்த்த சுகாதார அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.

இருப்பினும், பொதுச் சேவை துறை, ஜேபிஎ மற்றும் நிதியமைச்சின் முடிவைப் பொருத்தே அது தீர்மானிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இவ்வாண்டு சுகாதார அமைச்சின் நான்கு வியூக குறிக்கோளில் இதுவும் இணைகப்பட்டுள்ளதாக டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் கூறினார்.

''ஒட்டுமொத்தமாக மனிதவள திட்டமிடல் மற்றும் முறைப்படுத்துதல் என்று குறிக்கப்படுவதையே நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மனிதவள முறைப்படுத்தலின் வியூக செயலாக்கத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறோம். இன்னும் அதை முழுமையாக நிறைவுப்படுத்தாத நிலையில், சிறிய அளவிலான வேலைகளை செய்வோம், '' என்றார் அவர்.

சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு, சுகாதார நிதி மற்றும் நிர்வாகத்தின் மாற்றம், சுகாதார ஒருங்கிணைப்பு சேவைகளை வழங்குதல் மற்றும் சுகாதாரத்தை இலக்கவியல் மயமாக்குதல் போன்றவை இதில் அடங்குவதாகவும் சுல்கிப்ளி தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கான புத்தாண்டு சந்திப்பிற்குப் பின்னர் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.


இதனிடையே, உப்பு உட்கொள்வதற்கு எதிரான பிரச்சாரத்தை சுகாதார அமைச்சு இவ்வாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உயர் இரத்த அழுத்தம் போன்ற சுகாதார பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில், கடந்த ஆண்டில், சிகரெட் மற்றும் சீனிக்கு எதிரான பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

''உப்பு என்றால், நாம் இன்னும் அல்லது திட்டமிட்டு வருகிறோம். இது, தொடர்பில் நாம் ஒரு அறிவிப்பை வெளியிடுவோம். சத்துணவு தரப்பில், உப்புக்கு எதிரான பிரச்சாரத்தை எவ்வாறு கையாளப்போகிறோம் என்பதை உறுதிப்படுத்த பொது சுகாதாரத் துறைகள் இணைந்து செயல்படும், '' என்றார் அவர்.

புத்ராஜெயாவில், இன்று நடைபெற்ற சுகாதாரப் பணியாளர்கள் உடனான புத்தாண்டு சந்திப்புக்கு பின்னர், டாக்டர் சுல்கிப்ளி அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)