பொது

பாலஸ்தீனர்களை உட்படுத்திய சலசலப்பு; அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

06/01/2025 06:29 PM

சிப்பாங், 06 ஜனவரி (பெர்னாமா) - கோலாலம்பூர் விஸ்மா டிரான்சிட், டபல்யு.தி.கே எல்லில் சனிக்கிழமை, பாலஸ்தீனர்களை உட்படுத்திய சலசலப்பு சம்பவம் குறித்து வரும் புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இச்சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, அதன் அண்மைய தகவல்களைத் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டினிடம் இருந்தும் அமைச்சரவைப் பெறவிருப்பதாக தொடர் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

''இந்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், தற்காப்பு அமைச்சரிடமிருந்து அண்மையக் தகவல்கள் நிச்சயம் பெறப்படும். அதோடு, கடந்த அமைச்சரவை கூட்டங்களில், புதிய வளாகத்திற்குச் செல்வது குறித்து பேசப்பட்டது. இதுவரை அமைச்சரவைக்குக் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் புதன்கிழமை கூட்டத்திற்குப் பிறகு ஊடக நண்பர்களுக்கு சில அறிவிப்புகள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்,'' என்றார் அவர்.

டபல்யு.தி.கே எல்லில் கடந்த சனிக்கிழமை நடந்த சலசலப்பு சம்பவம் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு ஃபஹ்மி ஃபட்சில் அவ்வாறு விவரித்தார்.

நேற்று மாலை, டபல்யு.தி.கே எலில் ஏற்பட்ட சலசலப்பில் பாலஸ்தீனர்கள் ஈடுபட்டிருந்ததை, மலேசிய இராணுவப் படை, ஏ.தி.எம் உறுதிப்படுத்தியது.

தங்கள் நாட்டிற்கு திரும்ப விரும்பும் பாலஸ்தீனர்களின் விண்ணப்ப செயல்முறைகளை விரைவுப்படுத்தும் நோக்கில், அந்த சலசலப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக ஏ.தி.எம் குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக ஃபஹ்மி இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடைபெற்ற 2026 மலேசியாவை சுற்றிப் பார்க்கும் ஆண்டு பிரச்சாரத் தொடக்க விழாவிற்கு வருகை புரிந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)