குஜராத், 06 ஜனவரி (பெர்னாமா) - குஜராத் மாநிலத்தில் போர்பந்தரில் இந்திய கடலோர காவற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கியது.
அதிலிருந்த இரு விமானிகள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
போர்பந்தர், விமான நிலையத்தில், கடலோர காவற்படையின் 'Dhruv' இலகுரக ஹெலிகாப்டரில் அம்மூவரும் பயிற்சி மேற்கொண்டிருந்த நேரத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கின்றது.
பயிற்சி முடித்து, அந்த ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்த மீட்புப்படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, அதில் சிக்கிய மூவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
விபத்திற்கான காரணம் குறித்து கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போர்பந்தர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)