பேங்காக், 06 ஜனவரி (பெர்னாமா) - 2024 ஆசிய கிண்ண காற்பந்து போட்டியின் வெற்றியாளர் கிண்ணத்தை மூன்றாம் முறையாக வியட்நாம் கைப்பற்றியது.
நேற்றிரவு நடைபெற்ற இரண்டாம் சுற்று இறுதி ஆட்டத்தில் 5-3 என்ற மொத்த கோல்கள் எண்ணிக்கையில், நடப்பு வெற்றியாளராக தாய்லாந்தை வீழ்த்தி வியட்நாம், மீண்டும் வெற்றியாளராக உருவெடுத்தது.
பேங்காக்கில் உள்ள ராஜமங்கலா அரங்கில் நடைபெற்ற இரண்டாம் சுற்று இறுதி ஆட்டத்தில், வியட்நாம் தாய்லாந்தை கடும் சவாலுடன் எதிர்கொண்டது.
சொந்த இடத்தில் நம்பிக்கையோடு களமிறங்கிய தாய்லாந்தை எட்டாவது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து வியட்நாம் திணறச் செய்தது.
அதன் பின்னர், 28வது நிமிடத்தில் தாய்லாந்து அதற்கான கோலை அடிக்க 1-1 என்று முதல் பாதி ஆட்டம் சமமானது.
இரண்டாம் பாதியின் 64வது நிமிடத்தில் இரண்டாம் கோலை அடித்து தாய்லாந்து முன்னேறிய வேளையில் அதன் ஆட்டக்கார் ஒருவர் செய்த தவற்றால் 74வது சிவப்பு அட்டை வழங்கப்பட்டு அவ்வணி 10 பேருடன் விளையாட நேர்ந்தது.
அவ்வாய்பை நன்கு பயன்படுதிதிய வியட்நாம், ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் தொடர்ந்து இரு கோல்களுடன் 3-2 என தனது வெற்றியை உறுதி செய்தது.
கடந்த ஆட்டத்தைச் சேர்ந்து 5-3 என்ற மொத்த கோல்கள் எண்ணிக்கையில் வியட்நாம் 2024 ஆசிய கிண்ணத்தை வென்று சாதனைப் படைத்தது.
2020, 2022 என தொடர்ந்து ஈராண்டுகளாக ஆசிய கிண்ணத்தைத் தாய்லாந்து தற்காத்த வேளையில் 2008, 2018 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு வியட்நாம் அதனைக் கைப்பற்றியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)