பேங்காக், 06 ஜனவரி (பெர்னாமா) - அமெரிக்கா கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்புயலை எதிர்கொண்டிருக்கின்றது.
இந்த மிகப்பெரிய குளிர்கால புயலால் 7 கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் பாதிப்படையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய அமெரிக்காவில் தொடங்கிய இப்பனிப்புயல் அடுத்த சில நாட்களில் கிழக்கை நோக்கி நகரும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Kentucky, Virginia, Kansas, Arkansas, dan Missouri ஆகிய மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் டி.சி, Baltimore, Philadelphia போன்ற நகரங்கள் ஞாயிறு தொடங்கி பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளன.
சாலைகளில் நிலைமைகள் ஏற்கனவே மோசமடைந்துள்ள நிலையில் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சில விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன.
அதோடு, இப்புயல் கிழக்கு நோக்கி நகரும்போது இன்னும் மிகக்குறைந்த வெப்பநிலையை அமெரிக்க மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)