கனடா, 07 ஜனவரி (பெர்னாமா) - லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து தாம் விலகுவதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அறிவித்தார்.
எனினும், புதியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தாம் அப்பதவியில் நீடிக்கவிருப்பதாக அவர் இருக்கும் நிலையில் "எதுவும் மாறவில்லை" என்று எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்ச் 24ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை ஆளுநர் ஜெனரல் மேரி சைமன் ஏற்றுக்கொண்டதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
இதனிடையே, "எதுவும் மாறவில்லை" என்று கூட்டரசு கன்சவர்திஃப் தலைவர்
பீயர் பொய்லிவ்ரே தனது சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளதோடு ட்ரூடோவின் அறிவிப்பால் என்ன மாற்றம் ஏற்பட்டது என்ற கேள்வியையும் எழுப்பினார்.
லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் ட்ரூடோ செய்த அனைத்தையும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆதரித்தனர்.
இப்போது அவர்கள், மற்றொரு தோற்றத்தை உருவாக்கி மேலும் நான்கு ஆண்டுகளுக்குக் கனடிய வாக்காளர்களை ஏமாற்ற விரும்புகின்றனர் என்று பொய்லிவ்ரே குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த தேர்தலில் ட்ரூடோவின் கட்சியை பீயர் பொய்லிவ்ரேவின் கட்சி தோற்கடிக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றனர்.
ட்ரூடோ, 2013ஆம் ஆண்டு முதல் லிபரல் கட்சி தலைவராகவும் 2015ஆம் ஆண்டு தொடங்கி பிரதமராகவும் பதவி வகித்து வருகிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)