பொது

ஒத்தி வைக்கப்பட்ட பிரச்சனைகளின் பேச்சு வார்த்தையை மலேசியா- சிங்கப்பூர் தொடர்ந்துள்ளது

07/01/2025 06:33 PM

புத்ராஜெயா, 07 ஜனவரி (பெர்னாமா) - நீர் விநியோகம், வான்வெளி மற்றும் கடல் எல்லைகளை உள்ளடக்கி ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் சில பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தையை மலேசியா மற்றும் சிங்கப்பூர் மீண்டும் தொடர்ந்துள்ளது.

இரு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப குழு, அப்பேச்சுவார்த்தையை நடத்தும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"இவை சிக்கலான பிரச்சனைகள், அதிலும் பிரதமர் ரோலன்ஸ் கூறியதுபோல, அதை முழுமையாக அல்லது விரிவான முறையில் கையாள்வது என்பது நீங்கள் பார்ப்பதுபோல் சிங்கப்பூரில் உள்ள சில பகுதிகளின் தேவை அதிகமாக உள்ளது, சில தேவை மலேசியாவிற்கு உள்ளது. முழுமையாக பரிசீலிக்கப்பட வேண்டும் மற்றும் இறுதி தீர்வுக்கான முடிவு வெற்றியாக இருக்க வேண்டும், " என்றார் அவர்.

நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனைகள் இரு நாடுகளின் நேர்மறையான அணுகுமுறை மற்றும் நிலைப்பாட்டைக் குறுக்கிடாமல் பொருளாதாரம், எரிசக்தி, இலக்கவியல், முதலீடு மற்றும் வர்த்தகம் போன்ற அடிப்படை அம்சங்களில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு நிலவரத்தில், மலேசியா - சிங்கப்பூர் தலைவர்களுடனான 11வது சந்திப்பிற்காக நேற்று மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று தாயகம் திரும்பினார்.

சிப்பாங், பூங்கா ராயா வளாகத்தில் சிவப்பு கம்பளடத்துடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய அணிவகுப்புடன் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக, மலேசியாவிற்கு தாம் மேற்கொண்ட பயணம் முழுவதும் எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சேகரித்து அல்பம் வடிவில் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் கடீர் வோங்கிற்கு நினைவுச் சின்னமாக வழங்கினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து மாலை 5.20 மணிக்கு, வோங் மற்றும் அவரது துணைவியார் லூ சி லூய் உட்பட தூதுகுழுவினர்கள் சிங்கப்பூர் புறப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)