சிப்பாங், 07 ஜனவரி (பெர்னாமா) - நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் மூன்று கோடியே 56 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுப்பயணிகளுடன் திஎம்எம் 2026 எனப்படும் 2026 மலேசியாவைச் சுற்றிப் பார்க்கும் ஆண்டு பிரச்சாரத்தின் இலக்கை அடைய முடியும் என்று மலேசிய சுற்றுலா துறை நம்பிக்கை கொண்டுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி இப்பிரச்சாரத்தின் வழி கலாச்சாரம், இயற்கை மற்றும் சுற்றுச் சூழல், உள்கட்டமைப்பு ஆகியவற்றின் தனித்துவத்தை மலேசியா வெளிப்படுத்தும் வாய்ப்புள்ளதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ பி.மனோகரன் தெரிவித்திருக்கின்றார்.
''இலக்கை அடைவதற்கு பல்வெறு விளம்பர நடவடிக்கைகள், குறிப்பாக இந்த நேரத்தில் வர்த்தக நாடுகளுக்கு வியாபார பணிகளை நடத்துவது குறிக்கோளாகும். இதர ஆசியான் நாடுகளான சீனா, இந்தியா போன்ற மத்திய கிழக்கு போன்ற ஆசியான் நாடுகளுக்கு கூடுதலாக கவனம் செலுத்தும் அனைத்துலக நாடுகளை தவிர. இந்த நாடுகளுடன் நம்மிடம் நேரடி விநியோக வசதிகள் உள்ளன, '' என்றார் அவர்.
கவரக்கூடிய சுற்றுலா சேவைகளுடன் அனுபவமிக்க சுற்றுலா பயணத்தில் திஎம்எம் 2026 கவனம் செலுத்துவதாக மனோகரன் கூறினார்.
மலேசியாவில் உள்ள தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பல்லின மக்களின் அனுபவங்களைப் பெறுவதோடு உள்ளூர் மக்களுடன் தொடர்புக் கொள்வதற்கான வாய்ப்புகளைச் சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதும் இதில் அடங்கும் என்றார் அவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)