இந்தோனேசியா, 07 ஜனவரி (பெர்னாமா) -- இந்தோனேசியாவில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குறைபாட்டை போக்க, அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ள இத்திட்டத்தில் சாதம், காய்கறிகள், பழங்கள், கோழி ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களில் இலவச உணவு திட்டமும் அடங்கும்.
முதற்கட்டமாக, 190 சமையல் அறைகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டது.
இதனிடையே, இத்திட்டத்தின் தொடக்க நாளில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)