கலிபோர்னியா, 08 ஜனவரி (பெர்னாமா) -- லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டிருக்கும் இரண்டாவது காட்டுத் தீயினால், அங்குள்ள மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெவ்வாய்கிழமை மாலைக்குள், அல்டடேனாவில், சுமார் 400 ஏக்கருக்கும் மேல் தீ பரவியதால், வெளியேற்றத்திற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதி தரப்பு, X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
பசிபிக் பாலிசேட்ஸின் வடக்கிழக்கு பகுதியில் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அல்டடேனா அமைந்துள்ளது.
அங்கு பிரபலங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், பலத்த காற்று வீசியதால் பரவிய காட்டுத் தீயினால் வீடுகள் சேதமடைந்தன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, பசிபிக் பாலிசேட்ஸில் காட்டுத் தீயினால் சேதமடைந்த அல்லது அழிந்த கட்டமைப்புகளின் சரியான எண்ணிக்கையை அதிகாரிகள் வெளியிடவில்லை.
எனினும், சுமார் முப்பதாயிரம் குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)