புத்ராஜெயா, 08 ஜனவரி (பெர்னாமா) -- அரசாங்க சேவையை, மக்கள் எளிதாக பெறுவதற்கு, புதிய முயற்சியான, முதலாவது SENTUHAN MADANI முகப்பு, நாளை புத்ராஜெயா அலமண்டா பேரங்காடியில் திறக்கப்படும்.
வெவ்வேறு நிறுவனங்களின் ஆறு முகப்புகள் வழி, 90-கும் மேற்பட்ட அரசாங்க சேவை, அந்த முகப்புகளில் வழங்கப்படும் என்று பிரதமர் துறை அலுவலகத்தின் மடானி கண்காணிப்புப் பிரிவு தலைமை இயக்குநர் முஹமட் காலிட் முஹமட் லத்திப் தெரிவித்தார்.
சாலை போக்குவரத்து துறை, Pos Malaysia, மலேசிய நிறுவன ஆணையம், Tenaga Nasional நிறுவனம், ஊழியர் சேமநிதி வாரியம், MyDigital ID ஆகியவற்றை உள்ளடக்கி அந்த முகப்புகள் இருக்கும் என்று காலிட் முஹமட் குறிப்பிட்டார்.
''முகப்புகள், அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் முகப்புகள் ஆகியவற்றை ஓரிடத்தில் வைப்பதே இந்த செந்துஹான் மடானி முகப்பின் நோக்கமாகும். இதன்வழி நீண்ட நேரம் செயல்படக்கூடிய பாதுகாப்பான சேவையை மக்கள் எளிதில் பெற முடியும்,'' என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் Sentuhan MADANI முகப்பின் தயார்நிலை பணிகளைப் பார்வையிட்ட பின்னர், காலிட் முஹமட் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)