பொது

PCB-கான புதிய சேவை முறை அறிமுகம்

08/01/2025 07:23 PM

புத்ராஜெயா, 08 ஜனவரி (பெர்னாமா) -- நடப்பில் இருக்கும் e-PCB, e-Data PCB மற்றும் e-CP39 ஆகியவற்றுக்குப் பதிலாக, மாதாந்திர வரி கட்டணம், PCB-கான புதிய சேவை முறை, e-PCB Plus-ஐ உள்நாட்டு வருமான வரி வாரியம் (எல்.எச்.டி.என்) அறிமுகப்படுத்தி உள்ளது.

MyTax என்ற ஒரே தளத்தின் வழி இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி, e-PCB Plus-சின் முதலாம் கட்ட முறையை நோக்கிய திட்டத்திற்கு ஏற்ப இந்த அமலாக்கம் அமைந்துள்ளது.

PCB-இல் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து முதலாளிகளுக்கான, MyTax-சில், முதலாளிகளின் பங்களிப்பு பதிவு, முதலாளிகள் பிரதிநிதி மற்றும் PCB நிர்வாகி ஆகியோரையும், e-PCB Plus நிர்வாக பிரதிநிதியையும் உள்ளடக்கி உள்ளதாக எல்.எச்.டி.என் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அச்சேவை அமலாக்கத்தைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி அல்லது அதற்குள் தற்போதைய மாத கட்டணத்திற்கான அனைத்து தரவு சமர்ப்பிப்பு மற்றும் PCB கட்டணம் அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளின் கட்டணத்தைச் செலுத்த முதலாளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னதாக PCB தகவல் அல்லது பதிவுகளை முதலாளிகள் சரிபார்த்துக் கொள்ள, ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி, PCB அமைப்பு சரிபார்ப்பதற்கு மட்டுமே திறந்திருக்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)