புதுடெல்லி, 10 ஜனவரி (பெர்னாமா) - 18ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
புலம்பெயர்ந்தோருடனான இந்தியாவின் நெருங்கிய உறவுகளை கொண்டாடும் வகையில் மறக்க முடியாத நாளாகவும் இம்மாநாடு அமைந்தது.
அதேவேளையில், புலம்பெயர்ந்த இந்தியர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமரின் உரை அமைந்திருந்தது.
"இந்திய புலம்பெயர்ந்தோர் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர். இது பெருமைப்பட வேண்டிய சாதனையாகும். ஆனால் அவர்கள் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது," என்று மோடி தமது உரையில் வலியுறுத்திக் கூறினார்.
மேலும், உலகிற்குத் தேவைப்படும் தொழில்சார் வல்லுநர்களை இந்தியா எப்படி பூர்த்தி செய்யும் என்பதை மோடி தமதுரையில் விளக்கினார்.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கவிய அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, இந்த அதிகாரப்பூர்வ பயணத்தின் வழி, மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுபெறும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக இலக்கவியல் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான இணக்கம் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)