உலகம்

மியன்மார் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 40 பேர் பலி

10/01/2025 06:07 PM

யங்கூன், 10 ஜனவரி (பெர்னாமா) -- மியன்மார், ராக்கைன் மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் அந்நாட்டின் இராணுவம் மேற்கொண்ட வான் வழித் தாக்குதலில், 40 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

புதன்கிழமை அந்நாட்டு நேரப்படு பிற்பகல் பணி 1.20-க்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக அராக்கான் எனும் கிளர்ச்சிப்படையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இத்தாக்குதலில் மேலும் 500 வீடுகள் சேதமடைந்தன.

ஆங் சான் சூச்சியின் அரசாங்கத்தைக் கவிழ்த்து, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, அந்நாட்டில் இராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சிப்படைகள் உருவாகியுள்ளன.

மியன்மாரின் சில பகுதிகளை கிளர்ச்சிப்படைகள் தன் வசம் வைத்திருப்பதால், இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இத்தாக்குதல்களால், பொதுமக்களில் பலர் கொல்லப்படுவதாக அனைத்துலக நாடுகள் குற்றம் சாட்டி இராணுவத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)