உலகம்

வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது கலிஃபோர்னியா காட்டுத்தீ

10/01/2025 06:11 PM

கலிஃபோர்னியா, 10 ஜனவரி (பெர்னாமா) - அமெரிக்கா தெற்கு கலிபோர்னியா மகாணத்தில் பரவி வரும் காட்டுத்தீ அந்நாட்டில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது,  

பல்லாயிரகணக்கான மக்கள் அங்குள்ள நகரங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் இதுவரை அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இருப்பினும், அதன் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை  என்றும் அவர்  தெரிவித்தனர்.

LOS ANGELES COUNTY பகுதியில், காட்டுத் தீ இன்னும் அணைக்க முடியாத நிலையில் அதனை கட்டுப்படுத்த செயற்கைகோள் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர்.

காட்டுத் தீயானது கலிபோர்னியா முழுவதும் 24 மணிநேரத்திற்குள் சுமார் 50 ஆயிரத்திற்கு மேலான ஏக்கர் நிலங்களை அழித்துள்ளது. 

இதனால் பல கட்டிடங்களும் காடுகளும் அழிவை சத்தித்து வருகின்றன. 

அப்பகுதியில் வாழ்ந்து வந்த சுமார் 50 ஆயிரம் மக்கள் வெளியேறிய வேளையில், வியார்கள் வணிக வளாகங்களை காலி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

"நான் இப்போது பாலிசேட்ஸ் தீ பற்றிய விபரங்களை வழங்குகிறேன். தற்போது அங்கு 19,978 ஏக்கர் நிலபரப்பும் 5,316 கட்டிடங்கள் சேதமடைந்து அல்லது அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எங்களின் பிரார்த்தனைகள் இருக்கும், இந்தச் சம்பவத்தால் தற்போது இரு உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன," என்று லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு பிரிவுத் தலைவர் கிறிஸ்டின் க்ரோலி தெரிவித்தார்.
 
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீயில் மாண்டோர் எண்ணிக்கை உயரலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

====  FLASH ======


இதனிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ்  பகுதி மற்றும் தெற்கு கலிபோர்னியாவின் பிற பகுதிகளில் உள்ள விமான நிலையங்களும் சுற்றுலா தலங்களும் காட்டுத்தீ பரவாலும் புகை நிறைந்து  பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. 

வானிலை காரணமாக பல விமானங்கள் தாமதமாவதோடு பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

அதோடு, வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வரும் நிலையில் அப்பகுதிகளைச் சார்ந்த Universal Studios Hollywood,  Universal CityWalk, Six Flags Magic Mountain  உட்பட பல சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

====  FLASH ======

மற்றுமொரு நிலவரத்தில், தீயணைப்பு நடவடிக்கைக்கான முழுச் செலவையும் மத்திய அரசாங்கம் ஏற்கும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். 

பலத்த காற்று வீசும் என்று கூறப்படுவதால் சம்பந்தப்பட்ட நகரங்களில் தீ இன்னும் வேகமாகப் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

தீயணைப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்கு கனடாவும் தற்போது அதன் படைகளை கலிபோர்னியா மகாணத்திற்கு அனுப்பியுள்ளது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)