உலகம்

கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்திலிருந்து 24 சடலங்கள் மீட்கப்பட்டன

15/01/2025 02:37 PM

ஸ்டில்ஃபோன்டைன், 15 ஜனவரி (பெர்னாமா) --   தென்னாப்பிரிக்கா, ஸ்டில்ஃபோன்டைன் எனும் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட சுரங்கத்தில் பல மாதங்களாக சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனுமதியின்றி வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பல மாதங்களாக அச்சுரங்கத்தினுள் அகப்பட்டுக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை சில தொழிலாளர்கள் உயிரிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பட்டினி அல்லது நீர்ச்சத்து குறைப்பாட்டினால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கையில் இதுவரை 24 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 37 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் 500-க்கும் அதிகமான தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

சுரங்கத் தொழிலாளர்களில் சிலர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து சுரங்கத்தினுள் இருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் காப்பாற்றப்பட்ட சில சுரங்கத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)