லங்காவி , 19 ஜனவரி (பெர்னாமா) -- ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இன்று தொடங்கி இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆசியான் வெளியுறவு அமைச்சு வரவேற்றுள்ளது.
இந்த முன்னெடுப்பு, காசாவில் உள்ள மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு அங்குள்ள பதட்டத்தைத் தணிக்கவும் வாய்ப்பளிப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறியுள்ளார்.
இன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்ததில் இரு தரப்பின் நூற்றுக்கணக்கான பணையக்கைதிகள் விடுவிக்கப்படுவதும் அடங்கும்.
இதனிடையே, இங்கிலாந்திற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)