பொது

நாட்டின் உரிமையும் இறையாண்மையும் தற்காக்கப்பட வேண்டும் - மாமன்னர் வலியுறுத்து

03/02/2025 06:14 PM

கோலாலம்பூர், 03 பிப்ரவரி (பெர்னாமா) --   நாட்டின் இறையாண்மையும் நலனும் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய அரச தந்திர உறவு, சட்டங்கள் மற்றும் தற்காப்பு மூலம் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் உரிமையும் இறையாண்மையும் தற்காக்கப்பட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

“கடல் நடுவில் ஒரு பவளப் பாறை மட்டுமே இருந்தாலும், நாட்டின் உரிமையும் இறையாண்மையும் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய அரச தந்திர உறவு, சட்டங்கள், தற்காப்பு போன்றவற்றின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”, என்று அவர் கூறினார்.

அதைத் தவிர்த்து, இவ்வாண்டில் ஆசியான் தலைவராக மலேசியாவின் பங்களிப்பிற்கு ஏற்ப இவ்வட்டாரத்தின் வழிநடத்தி அதன் இலக்கை நிர்ணயிக்கும் ஆற்றலை நாடு நிரூபிக்க வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

மேலும், வன்முறையையும் அடக்குமுறையையும் எதிர்த்து, அமைதி கொள்கையை நிலைநாட்டுவதில் மலேசியா தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)