கோலாலம்பூர், 10 பிப்ரவரி (பெர்னாமா) - சனிக்கிழமை, சிலாங்கூர் செத்தியா ஆலாமில் உள்ள பேரங்காடி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அடையாளம் காண புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை JSJN, சிலாங்கூர் போலீஸ் மற்றும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை JSJ ஆகிய தரப்புகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளும்.
போதைப்பொருளைப் பயன்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக நம்பப்படும் அந்நபரின் நண்பர்களைக் கண்டுபிடிப்பதில் தமது தரப்பு ஒரு குழுவாக தீவிரமாக செயல்பட்டு வருவதாக புக்கிட் அமான் JSJN இயக்குநர் டத்தோ ஶ்ரீ காவ் கொக் சின்தெரிவித்தார்.
திங்கட்கிழமை, புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
துப்பாக்கி சூடு நடத்தியபோது அந்த ஆடவர் போதைப் பொருளை உட்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு பரிசோதனைகள் மேற்கொண்டால் மட்டுமே அதனை உறுதிப்படுத்த முடியும் என்று காவ் கூறினார்.
போதைப்பொருள் உள்ளிட்ட 11 குற்றப்பதிவுகளைக் கொண்டிருக்கும் சுமார் 30 வயதுடைய அச்சந்தேக நபரை போலீஸ் தீவிரமாக தேடிவருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)