தைச்சுங், 13 பிப்ரவரி (பெர்னாமா) - தைவான் தைச்சுங்கில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
SHIN KONG MATSUKOSHI என்ற அப்பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட இச்சம்பவத்தில், பத்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தீயணைப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் இன்னும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பேரங்காடியின் 12ஆவது மாடியில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது.
இதனால் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த பல தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தைவானின் Shin Kong குழுமமும், ஜப்பானின் Isetan Mitsukoshi Holdings நிறுவனமும் இணைந்து இப்பல்பொருள் அங்காடியை நடத்தி வந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)