வாஷிங்டன், டி.சி., 14 பிப்ரவரி (பெர்னாமா) - முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவைச் சேர்ந்த சுமார் ஏழு லட்சத்து 25,000 பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்துள்ளனர்.
சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருக்கும் நிலையில், அவர்களை முறையாக மீண்டும் ஏற்றுக் கொள்வதற்கு இந்தியா தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், ஆள்கடத்தல் நடவடிக்கையால் இந்தியர்களில் பலர் ஏமாற்றப்பட்டு அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியிருப்பதாக நரேந்திர மோடி கூறினார்.
ஆள்கடத்தல் நடவடிக்கையை முற்றாக ஒழித்தால் சட்டவிரோதமாக குடியேறும் செயலும் தடுத்து நிறுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.
மெக்சிகோ மற்றும் எல் சால்வடாருக்குப் பிறகு இந்திய மக்களே அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்துள்ளதாக Pew ஆராய்ச்சி மையம் கூறுகிறது.
அமெரிக்கா - கனடா எல்லை வழி அமெரிக்காவுக்கு புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக உயர்வு கண்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, எல்லைக் காவல் படையினர் 14,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் கைது செய்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)