கோலாலம்பூர், 17 பிப்ரவரி (பெர்னாமா) -- வளர்ச்சி கண்டு வரும் ஊடகத் துறையில் நிலைத்திருப்பதை உறுதி செய்ய, புதிய தொழில்நுட்பங்கள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு Alஐ பயன்படுத்திக் கொள்ள OANA எனப்படும் ஆசிய பசிபிக் செய்தி நிறுவனங்களின் சங்க உறுப்பினர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
OANA வழி பத்திரிக்கை நிறுவனங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமைவதாக பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.
''கருத்துச் சுதந்திரம், செய்தி வழங்கும் நெறிமுறை மற்றும் சமமான செய்திகளைச் சமமாகப் பரப்புதல் ஆகிய மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கான பொறுப்பை ஊடகவியலாளராக நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இந்தக் கொள்கைகள் ஒரு சுதந்திரமான மற்றும் தகவலறிந்த சமூகத்தின் மூலக்கருவியாகும்.,'' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 54ஆவது OANA நிர்வாக குழு கூட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய போது நூருல் அஃபிடா அவ்வாறு தெரிவித்தார்.
இதில் பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜு துரை ராஜ் கலந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)