டொராண்டோ, 18 பிப்ரவரி (பெர்னாமா) - கனடாவின் டொராண்டோ Pearson விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 18 பேர் காயத்திற்கு ஆளாகினர்.
அவர்களில் ஒரு குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப்புயலைத் தொடர்ந்து பலத்த காற்றுக்கு மத்தியில் DELTA AIR LINES வட்டார ஜெட் விமானம் தரையிறங்கும் போது தலைகீழாகக் கவிழ்ந்ததில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது அவ்விமானத்தில் நான்கு விமானப் பணியாளர்கள் உட்பட 80 பேர் இருந்தனர்.
இச்சம்பவத்தினால், டொராண்டோ விமான நிலையம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மூடப்பட்டு பின்னர் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)